தருமபுரி, நவம்பர் 11:
இந்நிலையில், அதே பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் கிறிஸ்டோபர் என்பவருடன் நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை கிறிஸ்டோபர், குமார், சக்திவேல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள், சண்முகத்தின் நிலப்பகுதிக்குள் புகுந்து, அவரது கொட்டகையை ஜே.சி.பி மூலம் இடித்து தரைமட்டமாக்கியதோடு, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற சண்முகத்தை தாக்கியதுடன்,
“உன்னை உயிரோடு விடமாட்டோம்,”என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.
உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி சண்முகம், பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்து பாதுகாப்பு கோரியுள்ளார். பாலக்கோடு காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)