மொரப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே தற்காப்புக் கலை போட்டியில், கம்பைநல்லூர் அருகே அமைந்துள்ள கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த பல மாணவ–மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில், கெலவள்ளி ஊ.ஒ. நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான திறமையுடன் போட்டியிட்டு, முதல் பரிசு கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பெற்றனர்.
மாணவர்களின் இந்த சாதனை விழாவில், பள்ளி தலைமையாசிரியர் ச. சாக்கம்மாள் தாமும் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்தினார். அவரின் ஊக்கமும் வழிகாட்டுதலும் அனைவரையும் கவர்ந்ததாக கூறப்பட்டது. பள்ளி உதவி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களின் வெற்றியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, குழந்தைகளை பாராட்டினர்.

.jpg)