இந்த சட்டவிரோதச் செயல்பாடுகள் காரணமாக இயற்கை வளங்கள் வேகமாக அழிந்து, குன்றுகள் மற்றும் மலைகள் குறைந்து, மரங்கள் அகற்றப்பட்டு வருதல் சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தடி நீர் ஆபத்தான நிலையில்
மலைகள் அகற்றப்படுவதால், வனங்கள் அழிவதால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதனால் வருங்காலங்களில்:
-
விவசாயத்திற்கு தண்ணீர் பஞ்சம்
-
குடிநீர் தட்டுப்பாடு
-
மழை குறைபாடுஎன்ற பல்வேறு சிக்கல்கள் உருவாகலாம் என்று பொதுமக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஒரு மலை முழுவதும் காணாமல் போன பரபரப்பு
பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி ஊராட்சியில் உள்ள பெருமாள் கோயில் பள்ளம் பகுதியில் ஒருகாலத்தில் இருந்த ஒரு சிறிய மலை முழுமையானும் அகற்றப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேள்வி எழுக்கும் பொதுமக்கள்
பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்:
“இவ்வளவு பெரிய அளவில் மலைகள் காணாமல் போகும் குடைப்பு நடைபெறும்போது, மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, போலீசார், கனிம வளத்துறை – யாரும் இதைத் தடுக்க முடியாதது ஏன்?”
கனிம வளக் கொள்ளையர்கள், அதிகாரிகளின் ஒத்துழைப்பு அல்லது அலட்சியம் இல்லாமல் இவ்வாறான கொள்ளையைச் செய்வது சாத்தியமல்ல என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்தும் நடைபெறும் இந்த சட்டவிரோத கனிம வளச் செயல்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)