Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2025–2026 மாணவர் சேர்க்கை நவம்பர் 28 வரை நீட்டிப்பு.


தருமபுரி, நவம்பர் 6:

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் செயல்படும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி (கல்லூரி குறியீடு: 145)யில் 2025–2026 கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப தேதி நவம்பர் 28, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை தொழில்நுட்பக் கல்வி இயக்கம் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இணைந்து அறிவித்துள்ளனர்.


தற்போது கல்லூரியில் துறைவாரியாக மொத்தம் 111 காலியிடங்கள் உள்ளன:

வ. எண்துறை பெயர்காலியிடங்கள்
1அமைப்பியல் (Civil Engineering)17
2இயந்திரவியல் (Mechanical Engineering)16
3மின்னியல் மற்றும் மின்னணுவியல் (Electrical & Electronics Engg.)24
4மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் (Electronics & Communication Engg.)39
5இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) (Tool & Die Engg.)15
மொத்தம்111

கல்லூரியில் சேர்க்கைக்கு தகுதியானவர்கள்:

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அல்லது

  • 11ஆம் வகுப்பு இடைநின்றவர்கள், அல்லது

  • 12ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் ஆகியோர்,


தங்களுக்கு விருப்பமான துறையில் நேரடியாக விண்ணப்பித்து உடனடியாக சேரலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.


மாணவர்கள் தங்களின் கல்வி ஆவணங்களுடன் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, பாலக்கோடுயில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
அனைத்து தகுதியுள்ள மாணாக்கர்களும் இந்த வாய்ப்பினை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies