தருமபுரி, நவம்பர் 7:
தருமபுரி BSNL அலுவலகம் முன்பாக, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (UCPI) சார்பில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் தருமபுரி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வத்தல்மலை ஜி. ராஜகோபால் அவர்கள் தலைமை தாங்கினார்.
விழாவில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி. இரவி அவர்கள் கட்சிக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தொழிற்சங்க தலைவர் எஸ். சுந்தரம் மற்றும் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அவர்கள் தங்களது உரையில்,
“நவம்பர் புரட்சி என்பது தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றி. இன்று சமூக நீதி, சமத்துவம், தொழிலாளர் உரிமைகள் குறித்து குரல் கொடுக்க வேண்டிய காலம் மீண்டும் வந்துள்ளது,” எனக் குறிப்பிட்டனர்.
கூட்டத்தின் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சி. பாலன், மாவட்ட பொருளாளர் எ. அலமேலு, சி. அழகேசன், ஜி. பச்சாகவுண்டர், வெ. பை. மாதையன், வி. செல்வம், என். பி. ராஜி, எம். குமார், கே. இலட்சுமணன், ஜெ. காளியம்மாள், எம். முண்ணு, வி. அர்சுணன், ஆர். மல்லையன், கே. ராஜமாணிக்கம், அ. முருகன், கே.சி. மணி ஆகியோர் உட்பட பல நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முழுவதும் சமத்துவம், சமூக நீதி மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கோஷங்கள் ஒலித்தன.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)