கோவை TNPID சிறப்பு நீதிமன்றத்தின் அசல் வழக்கு எண் O.A.26/2025, தீர்ப்பு நாள் 02.04.2025-ல் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி, நிறுவனத்திற்குச் சொந்தமான சொத்துகளை ஏலத்தில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தருமபுரி தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. கவிதா அவர்களால் 12.11.2025 (புதன்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணியளவில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முல்லை கூட்டரங்கில் பொது ஏலம் நடைபெற உள்ளது.
ஏல நிபந்தனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலக விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். மேலும், ஏலத்திற்கு முன்பாக அசையும் சொத்தினை பார்வையிட விருப்பமுள்ளவர்கள், தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், மாருதி மெஸ் அருகில், வள்ளுவர் நகர், ஒட்டப்பட்டி, நல்லம்பள்ளி வட்டம் என்ற முகவரியில் சொத்தினை நேரில் பார்வையிடலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. கவிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)