பாலக்கோடு, நவ. 16 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ECO System Scan மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.11.2025) திறந்து வைத்து பார்வையிட்டார்கள். இதன் மூலம் பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மேம்பட்ட ஸ்கேன் வசதி கிடைக்கஉள்ளது.
புதிய ஸ்கேன் மையத்தை தொடங்கி வைத்த பிறகு மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். முதலில் புறநோயாளிகள் பதிவு பிரிவு, மருந்தகம், அவசர சேவை பகுதி உள்ளிட்ட இடங்களில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படும் முறைகளையும் நேரில் பார்வையிட்டார்.
பின் தீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பகுதி, பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நல மருத்துவம், பொதுமருத்துவ பிரிவு மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கான மருத்துவ வசதிகள் முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்தினார்.
நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் காத்திருக்கும் இடத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும், மருத்துவமனை வளாகத்தை முழுமையாக தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
மேலும் மருத்துவமனையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறியும் வகையில் சமையல் பிரிவையும் பார்வையிட்டார். நாய் கடி, பாம்பு கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் போதுமான அளவில் உள்ளனவா என்பதை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவம்) மரு. சாந்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)