Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் இந்திய ஆரி தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் “பெண்கல்வி விடுதலை” விழிப்புணர்வு ஆரி வொர்க் சித்திரம்.


பாலக்கோடு, நவ. 08 -

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில், இந்திய ஆரி தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் பெண்கல்வி மற்றும் பெண் விடுதலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆரி வொர்க் சித்திரம் – நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு ஏஞ்சல் விங்க் டிசைனர் சூர்யா தலைமையேற்றார். நிகழ்ச்சியை ஸ்ரீ மூகாம்பிகை கல்வி நிறுவன தலைவர் கோவிந்தராஜீ, காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், அரிமா நாகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.


நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் —

பெண் கல்வி, பெண் விடுதலை, பெண் சுதந்திரம் ஆகியவற்றை கலை வடிவில் வெளிப்படுத்துவது.


அதனை குறிக்கும் வகையில், “பெண் காலில் உள்ள விலங்கினை உடைத்தெறியும்” எனும் பெண் விடுதலை சின்னம் 28 அங்குல பிளவுஸ் கை தையல் வடிவில் ஆரி தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டது. இந்த உலக சாதனை முயற்சியில் 300க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் இணைந்து சுமார் 2 மணி நேரத்தில் பணியை நிறைவேற்றினர்.


போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நோபல் உலக சாதனை சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முழு ஏற்பாடுகளும் இந்திய ஆரி தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies