Type Here to Get Search Results !

“மக்களோடு மக்களாக” – மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அரூரில் தொடக்கம்.


அரூர், நவ 08:

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில், மறுமலர்ச்சி ஜனதா கட்சி சார்பில் “மக்களோடு மக்களாக” என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பு மற்றும் சேவை நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர் உயர்திரு ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்.

இதன் தொடக்கமாக அவர், அரூர் தொகுதி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் இல்லங்களுக்கு சென்று மக்களோடு நேரடியாக கலந்துரையாடி, பரிசுப் பொருட்களை வழங்கி மக்களின் நலனைக் கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களுடன் நெருக்கமாக இணைவது என்ற நோக்கம் முன்னெடுக்கப்படுகிறது என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் திரு. ஆனந்த சுப்பிரமணியம், மாநில பொருளாளர் திரு. அரங்கநாதன், மாநில இளைஞரணி பார்வையாளர் திரு. சுசீந்திரன், மாநில துணைத்தலைவர் திரு. சிவராஜ், மாநில தலைமை நிலைய செயலாளர் திரு. மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.


மேலும், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட செயலாளர் திரு. மோகன் குமார், அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு. சித்தன், நகர செயலாளர் வசந்த, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்பு, மாவட்ட மற்றும் இளைஞரணி பொறுப்பாளர்கள், முதல் கிளை தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்ச்சி முழுவதும் “மக்களோடு மக்களாக – மக்கள் நம்பிக்கைக்காக!” என்ற கோஷம் ஒலித்தது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies