ஏரியூர், நவ. 08 -
தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்துக்குட்பட்ட இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கலைவாணி, நல்லாசிரியர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் நலன் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
அதில்,
-
பள்ளியை உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் கோரிக்கை,
-
பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டிட வசதி ஏற்படுத்துதல்,
-
தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் மாணவ–மாணவிகளுக்காக அரசு விடுதி அமைத்தல் ஆகிய முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் பெருமாள் நன்றி கூறினார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)