Type Here to Get Search Results !

தருமபுரியில் 66 பேருக்கு ₹10.92 கோடி மானியம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் உதவி — மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.


தருமபுரி, நவம்பர் 12:

பட்டியலின மக்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கில், கடந்த நான்கரை ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் 66 நபர்களுக்கு மொத்தம் ₹10 கோடி 92 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகும். பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் முனைவு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், வங்கிக் கடனுடன் கூடிய அரசின் மானியம் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர் தொடர்ந்து கூறியதாவது:

“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஏழைகள், பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயனடையும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் தொழில் முனைவோராக பட்டியலின மக்களை உருவாக்குவதற்கான அம்பேத்கர் திட்டம் முக்கியமானது,” என்றார்.


இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி மேலாண்மை, வரவு–செலவு கணக்கீடு, வணிக யுத்திகள் உள்ளிட்ட தலைப்புகளில் தொழில்முனைவு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மட்டுமே 66 நபர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளதாகவும், இவர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் மொத்த மதிப்பு ₹10.92 கோடி எனவும் ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.



© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies