தருமபுரி, நவ. 19 -
தருமபுரி நகரில் கடந்த மூன்று நாட்களாக தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனியாக சுற்றித் திரிந்து வந்ததை கவனித்த பொதுமக்கள், மை தருமபுரி அமரர் சேவை அமைப்பு உறுப்பினர்களை தொடர்புகொண்டனர்.
இதையடுத்து, இன்று காலை மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, அறம் அறக்கட்டளை ரமேஷ், மற்றும் பெண் காவலர் மயில், தாமரைசெல்வி ஆகியோர் இணைந்து அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், அவர் தருமபுரி அரசு மருத்துவமனை மனநல காப்பக பிரிவில் மருத்துவ அலுவலர் மருத்துவர் பழனியப்பன் மற்றும் மருத்துவர் ப்ரிதா முன்னிலையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் ஆரம்ப சிகிச்சையில் அவர் தனது பெயர் மஞ்சுளா என்று கூறியதுடன் தெலுங்கு மொழியில் பேசுகிறார் என்பது தெரியவந்தது. அவருடைய குடும்ப விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை. மருத்துவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட மை தருமபுரி அமைப்பினரும் காவல்துறையினரையும் பாராட்டினர்.
.gif)

.jpg)