வெங்கட்ராமன் கடந்த பல ஆண்டுகளாக சேலம் மாவட்டம் மேச்சேரி, திருச்செங்கோடு ஆகிய இடங்களிலும், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஅள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றி வந்தார். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பொதுமக்களிடையே சிறந்த நற்பெயரை பெற்றிருந்தார். சமீபகாலமாக அவர் மாரண்டஅள்ளி போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது மகேந்திரமங்கலம் போலீசார் குடியிருப்பில் தனியாக தங்கியிருந்தார்.
அந்நிலையில், கடந்த மாதம் ரோந்து பணியை முடித்துக்கொண்டு குளிக்கச் சென்ற வெங்கட்ராமன், மூன்று மணி நேரமாக ஸ்டேஷன் திரும்பாததால் சக போலீசார் சந்தேகமடைந்தனர். அவர்கள் சென்று பார்த்தபோது கழிவறையின் கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டு, அவர் மயக்கநிலையிலிருந்ததை கண்டறிந்தனர்.
உடனடியாக கதவை உடைத்து மீட்டு, அவரை தருமபுரி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனது சொந்த ஊரில் வெங்கட்ராமன் உயிரிழந்தார். இச்சம்பவம் தருமபுரி மாவட்ட காவல் துறையினரிடமும், பொதுமக்களிடமும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)