தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்ரீராம் சில்க்ஸ் நிறுவனம், தரமான பட்டு ஜவுளிகள், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் துணிவகைகள் மற்றும் ரெடிமேட் ஆடைகள் குறைந்த விலையில் வழங்கி, பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக விளங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், தீபாவளி ஆடைகள் அறிமுக விழா மற்றும் பம்பர் குலுக்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஸ்ரீராம் சில்க்ஸ், இவ்வாண்டும் அந்த மரபை சிறப்பாக தொடர்ந்தது. அதன்படி, கடந்த அக்டோபர் 1 முதல் 16 வரை ஜவுளி வாங்கிய வாடிக்கையாளர்களுக்காக குலுக்கல் திட்டம் அறிவிக்கப்பட்டது. தினசரி 5 வாடிக்கையாளர்களுக்கு மிக்ஸி, குக்கர், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், பம்பர் பரிசாக ₹3 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்தது. அதற்கான பம்பர் குலுக்கல் விழா பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கே.ஜி.எம். மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர் மோகனபிரியா முன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டது.
இதில் அவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் அதிர்ஷ்டசாலியாக தேர்வாகினார். அவருக்கு ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. அதிர்ஷ்டசாலி கிஷோருக்கு பம்பர் பரிசை பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, டாக்டர் பாலகிருஷ்ணன், டாக்டர் மோகனபிரியா ஆகியோர் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பாலகிருஷ்ணன், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜவேல், நிர்வாக இயக்குநர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662