தருமபுரி – நவம்பர் 24 -
ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை தருமபுரி மாவட்டத்தை வந்தடைந்ததை ஒட்டி, உலக கோப்பையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி அவர்களின் முன்னிலையில் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
2025–ஆம் ஆண்டுக்கான ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் சென்னை மற்றும் மதுரை நகரங்களில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, உலக கோப்பை மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றது. நேற்று (23.11.2025) தருமபுரி மாவட்டத்திற்கு உலக கோப்பை வந்தடைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – தருமபுரி, மற்றும் தருமபுரி மாவட்ட ஹாக்கி யூனிட் ஆப் தமிழ் நாடு இணைந்து, தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற சிறப்பு விழாவில், உலக கோப்பை விளையாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

.jpg)