தருமபுரி – நவம்பர் 24
தருமபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட மகளிர் அதிகாரம் மையம், ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மை தருமபுரி அறக்கட்டளை இணைந்து, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, இளம் வயது கர்ப்பத் தடுப்பு, மற்றும் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துதல் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணியை நடத்தினர்.
பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி, குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தருமபுரி பேருந்து நிலையம் முதல் நான்கு ரோடு வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மாவட்ட சமூக நல அலுவலர் ஆ. கலாவதி, மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம. செல்வம் தலைமையாற்றினர். பேரணியை நகர் காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மை தருமபுரி தொண்டு நிறுவனம், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)