தருமபுரி – நவம்பர் 24
பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை செய்து வரும் மகளிரை கௌரவிக்கும் நோக்கில், வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் உலக மகளிர் தின விழாவில், தமிழ்நாடு அரசு சார்பில் ஔவையார் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்.
விருது பெறுபவருக்கு
-
₹1.50 இலட்சம் மதிப்பிலான காசோலை,
-
பொன்னாடை,
-
சான்றிதழ்வழங்கப்படும்.
விருதிற்கான தகுதி விதிமுறைகள்
-
தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆகியிருக்க வேண்டும்.
-
குறைந்தது 5 ஆண்டுகள்,பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு,மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு,பத்திரிகை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்புசெய்திருக்க வேண்டும்.
-
பெண்கள் தொடர்பான சேவைகளுக்கு மட்டுமே இந்த விருதுவழங்கப்படும்; பிற சமூக சேவைகள் கருதப்படமாட்டாது.
-
விருது தொடர்பான முழு விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும்செயல்முறை 14.11.2025 முதல்அரசின் விருதுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது:
-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டவையே ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆவணங்கள் சமர்ப்பிக்கும் விதிமுறை
இணையதளத்தில் பதிவு செய்த பின், தேவையான அனைத்து ஆவணங்களும் Booklet வடிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள், மாவட்ட சமூகநல அலுவலகம், கூடுதல் கட்டிடம், பழைய மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி – 636705. தொலைபேசி: 04342-233088 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)