நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவதும் கொடியேற்ற விழா மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெற்றன. முதன்மை நிகழ்ச்சி தருமபுரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் அவர்கள் புரட்சியாளர் லெனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தருமபுரி ஒன்றிய செயலாளர் கே. கோவிந்தசாமி தலைமையேற்றார். கருத்தரங்கில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மல்லிகா, தி. வ. தனுசன், நகர செயலாளர் ஆர். ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. எஸ். ராமச்சந்திரன், கே. என். மல்லையன், கே. பூபதி, ஏ. ஜெயா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவர்கள்,
“நவம்பர் புரட்சி உலக தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கான வரலாற்றுச் சின்னம். இன்றும் சமத்துவம், சமூக நீதி, தொழிலாளர் உரிமைகள் நிலைநிறுத்தப் போராடுவது காலத்தின் தேவை,”எனக் குறிப்பிட்டனர்.
அரூர்
அரூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.கே. கோவிந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பி. குமார் கொடியை ஏற்றி வைத்தார். ஜெயகாந்தன், சி. பழனி, வி. மாது, முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற புரட்சி தின விழாவில் மூத்த தோழர் டி. சேகர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த தோழர் எஸ். தீர்த்தகிரி கட்சிக்கொடியை ஏற்றி வைத்து, லெனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினார்.
பாப்பாரப்பட்டி
அ. பாப்பாரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை துவக்க விழா மற்றும் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா நடைபெற்றது. சி. முனுசாமி தலைமை வகித்தார். கிளை செயலாளர் டி. சஞ்சீவன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமாள் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே. விசுவநாதன் புரட்சித் தினத்தை வாழ்த்திப் பேசியதுடன், ஆர். சக்திவேல், மு. சிலம்பரசன், கே. லோகநாதன், எம். மணிகண்டன், சிவகுமார், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு
பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு வட்ட செயலாளர் பி. மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்து கொடியை ஏற்றி வைத்தார். ஜி. நக்கீரன், கோவிந்தசாமி, முருகன், பாண்டியம்மாள், சதீஷ், மாதேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நல்லம்பள்ளி
நல்லம்பள்ளியில் நடைபெற்ற புரட்சிதின விழாவில் ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ். சின்னராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ. அருச்சுனன், மாவட்டக் குழு உறுப்பினர் கே. எல்லப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர் காளி, பூங்கொடி ஆகியோர் லெனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர்.
நவம்பர் புரட்சித் தினம் முழுவதும், தருமபுரி மாவட்டம் முழுவதும் சமத்துவம், தொழிலாளர் ஒற்றுமை, புரட்சிச் சிந்தனை ஆகிய கோஷங்கள் முழங்கின.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)