பெங்களூரு – ஓசூர் ரயில் பாதையில் இரட்டைப் பாதை இணைப்புப் பணிகள் நடைபெறுவதையடுத்து, நாளை நவம்பர் 25, 2025 அன்று இம்மார்க்கம் வழியாகச் செல்லும் பல ரயில்களில் தெற்கு இரயில்வே நிர்வாகம் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படாதிருந்தாலும், சில முக்கிய ரயில்கள் தருமபுரி மற்றும் ஓசூர் நிலையங்களைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்.
யஷ்வந்த்பூர் – ஓசூர் இடையே இயக்கப்படும் கீழ்க்கண்ட ஆறு MEMU பயணிகள் ரயில்கள் நாளை முழுமையாக ரத்து:
66563, 66585, 06591, 66564, 66586, 06592
மாற்றுப் பாதையில் இயக்கப்படும் முக்கிய ரயில்கள்.
🔸 பெங்களூரு – எர்ணாகுளம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12677)
ஓசூர், தருமபுரி வழியாக செல்லாமல்
➡️ ஜோலார்பேட்டை – சேலம் வழியாகத் திருப்பி விடப்படுகிறது.
🔸 SMVT பெங்களூரு – காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16529)
➡️ சேலம் மார்க்கமாக இயக்கப்படுவதால்
தருமபுரி, ஓசூர் நிறுத்தங்கள் இல்லை.
🔸 கோயம்புத்தூர் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20641/20642)
➡️ சேலம் – திருப்பத்தூர் – ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும்.
இதனால் தருமபுரி, ஓசூர் நிலையங்களில் நிற்காது.
பயணிகள் அவதி
இந்த திடீர் மாற்றங்கள் காரணமாக, தருமபுரி மற்றும் ஓசூர் நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பயணிகள் தங்கள் ரயில் நேரம் மற்றும் வழித்தட விவரங்களை மீண்டும் சரிபார்க்குமாறு இரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)