தமிழ்நாடு குடும்பநலத் திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பொதுவாக பெண்களே கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலையில், ஆண்கள் குடும்பநலத்தில் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக அரசு ஆண்டுதோறும் நவீன வாசக்டமி இருவார விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகிறது.
தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு ஆண் கருத்தடை முகாம்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நவீன தழும்பில்லா கருத்தடை முறையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு அரசு ரூ.1100/- உதவித்தொகை வழங்கும்.
- எளிமையானது
- பயிற்சி பெற்ற மருத்துவரால் பாதுகாப்பாக செய்யப்படுவது
- பக்கவிளைவுகள் இல்லாதது
- மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை
- பெண்களின் கருத்தடை அறுவை சிகிச்சையைவிட மிகவும் எளிதானது
நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு. சாந்தி, துணை இயக்குநர்கள் பாலசுப்பிரமணியம், புவனேஸ்வரி, பாரதி, நகர நல அலுவலர் இலட்சியவர்ணா, மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)