தருமபுரி நகர திமுக மற்றும் நகர இளைஞரணி சார்பில், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று நகரத்தில் கொண்டாடப்பட்டது. தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி, எம்.பி. தலைமையில் நான்கு ரோடு மற்றும் பெரியார் சிலை அருகில் கேக் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர திமுக பொறுப்பாளர்கள் நாட்டான் மாது, கௌதம், நகர மன்ற தலைவர் லட்சுமி, முல்லைவேந்தன், ரேணுகாதேவி, ரஹீம், குமார், ரவி, சுருளிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகர இளைஞரணி அமைப்பாளர் சபரி பாண்டியன், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)