Type Here to Get Search Results !

தருமபுரியில் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் – கல்லூரி மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு.


தருமபுரி – நவம்பர் 28:

தருமபுரி மாவட்ட கல்லூரி மாணவ–மாணவியர்களுக்காக வருகிற 28.11.2025 அன்று புதிய மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் வங்கியாளர்கள், அரசு அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நேரடியாக வழிகாட்ட உள்ளனர். மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் படித்து வரும் தருமபுரி மாவட்ட மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வெளி மாவட்டம் அல்லது மாநிலங்களில் படிக்கும், ஆனால் சொந்த ஊராக தருமபுரி மாவட்டத்தை கொண்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.


கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in/ இணையதளத்தில் பதிவு செய்து, தங்களுக்கு அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும்.

பதிவுக்கான அவசியமான ஆவணங்கள்:
  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
  • கலந்தாய்வு கடிதம்
  • கல்லூரி சேர்க்கை கடிதம்
  • நன்னடத்தை, வருமானம், குடியிருப்பு மற்றும் சாதி சான்றிதழ்கள்
  • கல்லூரி கட்டண விவரம்

மேலும் தகவல்களுக்கு:
இந்தியன் வங்கி – முன்னோடி வங்கி மேலாளர்
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் (SIDCO, ஒட்டப்பட்டி)
தொலைபேசி: 8925533941 / 8925533942


தருமபுரி மாவட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies