தருமபுரி மேற்கு நகர திமுக சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. தருமபுரி மேற்கு நகர திமுக பொறுப்பாளர் M.P. கௌதம் ஏற்பாட்டில், தருமபுரி கிழக்கு நகர பொறுப்பாளர் நாட்டன் மாது முன்னிலையில் விழா நடைபெற்றது.
தருமபுரி நகராட்சி குமாரசாமிப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி, எம்.பி., பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி விழாவை துவக்கிவைத்தார்.
நிகழ்வில் திமுகவின் நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் காசிநாதன், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அழகுவேல், முல்லைவேந்தன், ஜெகன், சுருளிராஜன், வெங்கடாசலபதி, D.A. ரவி, ரஹீம், அம்பிகா, முருகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)