பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. பேரூர் கழக செயலாளர் மற்றும் பேரூராட்சி தலைவர் பி. கே. முரளி தலைமையில் விழா நடைபெற்றது. நகர அவை தலைவர் அமானுல்லா, இளைஞர் அணி அமைப்பாளர் மன்சூர், பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேசிய பேரூராட்சி தலைவர் பி. கே. முரளி அவர்கள், திராவிட ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கியும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உழைப்பை பாராட்டியும், பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அண்ணாதானம் வழங்கப்பட்டது. விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)