குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தருமபுரி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் “குழந்தைகளுக்கான நடை (Walk for Children)” எனும் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். பின்னர், குழந்தைகளுக்கான பாதுகாப்பு தின உறுதி மொழி, ஆட்சியர் தலைமையில் அனைவராலும் ஏற்கப்பட்டது.
பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி, செந்தில்நகர் – இலக்கியம்பட்டி சாலை – பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் கணிசமான விழிப்புணர்வை ஏற்படுத்தி நிறைவடைந்தது. தேசிய குழந்தைகள் தினம் (நவம்பர் 14), உலக குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்பு தினம் (நவம்பர் 19), சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (நவம்பர் 20) ஆகியவற்றை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளுடன் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த, கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீதரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. ம. செல்வம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. ம. சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதிசந்திரா உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், மாணவ–மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

.jpg)