தருமபுரி, நவம்பர் 14:
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நல்லம்பள்ளி வட்டம் பாளையம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாணவர்கள் வழங்கிய நடனங்கள், பாடல்கள், கலாசார நிகழ்ச்சிகளை ஆட்சியர் பார்வையிட்டு பாராட்டினார். சிறப்பாக நிகழ்த்திய மாணவ–மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிக்குப் பிறகு, பாளையம்புதூர் குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பெற்றோர்–ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆட்சியர் ரெ. சதீஸ், குழந்தைகளின் வயதுக்கேற்ற வளர்ச்சி நிலைகள், எடை, உயரம் போன்ற சுகாதார விவரங்கள் பற்றிய தகவல்களை பெற்றோர்களுடன் விவாதித்தார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மையத்தில் உள்ள சிறார்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட ICDS அலுவலர் திருமதி ச. பவித்ரா, இணை இயக்குநர் (மருத்துவம் & ஊரக நலப்பணிகள்) மரு. ம. சாந்தி, நல்லம்பள்ளி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பலர் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு: 9843 663 662

.jpg)