தருமபுரி – நவம்பர் 23
தருமபுரி மாவட்டம் தருமபுரி தொகுதிக்குட்பட்ட தடங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட இராஜப்பேட்டை ஆதி திராவிடர் நல நடுநிலைப்பள்ளி, சோலைக்கொட்டய் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வீடு வீடாக கணக்கெடுப்பு பணிகள் தொடர்ச்சி
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு படி, தருமபுரி மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் – 2026 நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 04.11.2025 முதல், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவங்களை வீடு வீடாக வழங்கி வருகின்றனர்.
வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்வதற்கு உதவிட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை முதல் சிறப்பு உதவி மையங்கள் செயல்பாட்டில் இருந்து, படிவங்கள் பூர்த்தி செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி வேகமாக நடைபெறுவதை ஆட்சியர் பார்வையிட்டார்.
படிவங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுகோள்
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு மீண்டும் BLO-க்களிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் பெயர் வரைவு பட்டியலில் இடம்பெறாது என்று ஆட்சியர் சதீஸ் அறிவுறுத்தினார்.
தொடர்பு எண்கள்
-
மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை: 1950
-
வாட்ஸ்-அப் தேர்தல் உதவி எண்: 9444123456
-
தருமபுரி வாக்காளர் பதிவு அலுவலர்: 04342–260927
-
பாலக்கோடு: 04348–222045
-
பென்னாகரம்: 04342–255636
-
பாப்பிரெட்டிப்பட்டி: 04346–246544
-
அரூர்: 04346–296565
ஆய்வில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு. பிரசன்னாமூர்த்தி உட்பட தொடர்புடைய
அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)