தருமபுரி, நவ.07:
தருமபுரி மாவட்டத்தில் தற்போது பல மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்கள் அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம், 2017-ன் கீழ் உரிமம் பெறுவது கட்டாயமாகும். அதன்படி, இத்தகைய மனநல மறுவாழ்வு மையங்கள் தங்களது நிறுவனங்களை தமிழ்நாடு மாநில மனநல ஆணையகத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு பெறாமல் செயல்பட்டு வரும் மையங்கள், உடனடியாக பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதற்காக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மனநல முதன்மை செயல் அலுவலர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், பதிவு விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக 🔗 https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளத்தில் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள்,
“மனநல சேவைகள் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சட்டப்படி உரிய அனுமதி பெறுவது அவசியம். உரிமம் பெறாமல் செயல்படும் மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்,”என தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)