நல்லம்பள்ளி, நவ. 15 :
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாகலஹள்ளி தரப்பு தண்டுகாரம்பட்டி கிராமத்தில் நிலப் பட்டா வழங்கலில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அந்தப் பகுதியில் நில உரிமையாளர் மற்றும் வழக்கறிஞருமான மாதேஷ்குமார் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
சர்வே எண் 402/1A4–க்கு வழங்கப்பட்ட கூட்டு பட்டா எண் 4983–இல் அவர், ஸ்ரீகாந்த் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் பெயர்கள் இருந்ததாகவும், இவர்களில் ராஜேஸ்வரி அவர்கள் 0.00.91 ஏக்கர் மட்டுமே அய்யாசாமிக்கு விற்று விட்டார் என்பதும், இது ஆவணம் எண் 2950/2025-ல் தெளிவாக இருப்பதும் அவர் கூறுகிறார்.
ஆனால் அய்யாசாமி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு முழு 2.73 ஏக்கர் நிலத்திற்கும் — அதாவது அவர்களுக்கு உரிய பகுதியை மீறி — புதிய பட்டா எண் 5034 வழங்கப்பட்டிருப்பது “சட்ட விரோதமான செயலாகும்” என அவர் குற்றம் சாட்டுகிறார்.
“சர்வே இல்லாமல், உட்பிரிவு இல்லாமல், VAO அறிக்கையின் அடிப்படையில் மட்டும் பட்டா வழங்குவது நிர்வாக முறைகேடு” — வழக்கறிஞர் மாதேஷ்குமார்
அவர் மேலும் கூறுவது:
-
கூட்டு பட்டா உட்பிரிப்பு செய்யாமல்,
-
சர்வேயர் அளவிடாமல்,
-
கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே,
-
துணை வட்டாட்சியர் நேரடியாக பட்டா வழங்கியிருப்பதுசட்ட நடைமுறைக்கு முற்றிலும் எதிரானது.
அதே நிலம் பின்னர் சிவக்குமார் என்ற நபருக்கும் பட்டா எண் 5114 மூலம் முழு 2.73 ஏக்கராக வழங்கப்பட்டிருப்பதும், பின்னர் அவர்களின் பெயர்களுடன் கூட்டு பட்டா எண் 5119 வெளியிடப்பட்டபோது கூட சிவக்குமாரின் பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருப்பது மிகப்பெரிய பிழை என அவர் கூறுகிறார்.
முதல்வரின் முகவரி துறையில் கொடுத்த மனுக்கள் தவறாக முடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு, மாதேஷ்குமார் பல கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்காததால், அவர் தனது மனுக்களை முதல்வரின் முகவரி துறை மூலம் அளித்திருந்தார். ஆனால், முழுமையான விசாரணை செய்யாமல் தவறான தகவலுடன் மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
அவர் குறிப்பிட்ட மனு எண்கள்:
-
TN/REV/DPI/I/PORTAL/09SEP25/15088713
-
TN/REV/DPI/I/PORTAL/09AUG25/13754529
-
TN/REV/DPI/I/PORTAL/22JUL25/12581477
-
TN/REV/DPI/I/PORTAL/15JUL25/12196070
-
TN/REV/DPI/I/PORTAL/29JUN25/12089888
-
TN/REV/DPI/I/PORTAL/30JUN25/12090409
“எனது உரிமை நீக்கப்பட்ட விதமும், பிறருக்கு முழு உரிமை வழங்கப்பட்ட முறையும், அதிகாரிகளின் நடவடிக்கைகளும் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்துகிறார். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)