தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலன் மற்றும் மேம்பாட்டு கழகம் (TAHDCO) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு சர்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய வழிவகுக்கும் வகையில் சிறப்பு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. தெரிவித்தார்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பயிற்சி
இந்த பயிற்சி சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு (IATA – CANADA) அங்கீகரித்தது.
பயிற்சிப் பாடங்கள்:
-
விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை (Passenger Ground Services, Reservation & Ticketing)
-
சரக்கு ஏற்றுமதி/இறக்குமதி அடிப்படை (Air Cargo Introductory)
-
சுற்றுலா மற்றும் பயண சேவை அடிப்படை (Foundation in Travel & Tourism)
தகுதி
-
குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி
-
18 முதல் 23 வயது வரை
-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே
பயிற்சி நன்மைகள்
-
பயிற்சிக்கான முழுச் செலவு ₹85,000 – அனைத்தும் TAHDCO வழங்கும்
-
6 மாத பயிற்சி – விடுதி வசதி உடன்
-
பயிற்சி முடித்தவர்களுக்கு IATA International Certificate
வேலை வாய்ப்புகள்
பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுபவர்கள் கீழ்க்கண்ட நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவர்: Indigo, Air India, SpiceJet, Go First, Menzies, Bird Aviation, Hyundai, iGo Tours, Zenith Tours, Alhind Tours போன்ற பிரபல நிறுவனங்கள்.
- ஆரம்ப சம்பளம்: ₹20,000 – ₹22,000
- பதவி உயர்வுடன்: ₹50,000 – ₹70,000 வரை சம்பள உயர்வு பெற வாய்ப்பு.
இதுவரை 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த திட்டத்தின் மூலம் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை
📌 இணையதளம்: www.tahdco.com
📌 நேரில் தொடர்புக்கு:
TAHDCO மாவட்ட மேலாளர் அலுவலகம்,
எண் 3, சாலை விநாயகர் கோவில் ரோடு,
விருப்பாட்சிப்புரம், தருமபுரி.
தகுதியான இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

.jpg)