தருமபுரி – நவம்பர் 21 -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியத்தின் சார்பில், தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தி வரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று 4-வது நாளை எட்டியது. போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காத்திருப்பு போராட்டம் (Sit-in Protest) நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையேற்றார். இதில் கலந்து கொண்ட நில அளவை அலுவலர்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:
முக்கிய கோரிக்கைகள்
-
இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் மனிதசக்திக்கு மீறிய பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
-
நில அளவர் பணிக்கான தேர்வை எழுதியவர்களின் முடிவுகளை உடனடியாக வெளியிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
-
ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை நிறுத்தி, காலமுறை ஊதியத்தில் அளவர்களை நியமிக்க வேண்டும்.
-
புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
-
வருவாய்த் துறையில் புதிதாக பிரிக்கப்பட்ட வருவாய் கோட்டங்களுக்கு உரிய கோட்டை ஆய்வாளர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
-
புல எல்லை மனுக்கள் தொடர்பான இணையவழி விண்ணப்பங்களில் முதல் மற்றும் மேல்முறையீட்டு நிலைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.
-
நில அளவை களப்பணியாளர்களின் உட்பிரிவு அதிகாரத்தை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கியிருந்ததை திரும்ப பெற்றே தீர வேண்டும்.
போராட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் முரளிதரன், தருமபுரி கோட்டத் தலைவர் துரை, தருமபுரி கோட்ட துணைத் தலைவர் சிவசங்கர், அரூர் கோட்டத் தலைவர் சக்திவேல், அரூர் கோட்ட துணைத்தலைவர் ராகவேந்திர பிரபு, மாவட்டத் தலைவர் சுருளிநாதன், மாவட்டச் செயலாளர்கள் தெய்வானை, காவேரி, மாநில செயலாளர் நாகராஜன் மற்றும் பல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)