தருமபுரி – நவம்பர் 21.
தருமபுரி பேருந்து நிலையத்தில் புதிய அரசுப் பேருந்துகள் சேவைக்கு வருவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடியசைத்து இப்புதிய பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலை வகித்தார்.
தருமபுரி – பென்னாகரம் (LSS) வழித்தடத்தில்
-
ஒரு தரை தள (டிஜிட்டல் டிக்கெட் வசதி உடன்) புதிய பேருந்து சேவைக்கு வந்துள்ளது.
-
தருமபுரி மாவட்டத்தில் முதன்முறையாக இவ்வழித்தடத்தில் டிஜிட்டல் முறையில் டிக்கெட் விநியோகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன்,
-
ஏற்கனவே சேவை ஆற்றி வந்த 5 பழைய பேருந்துகளுக்கு பதிலாக 5 புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் லட்சுமி, நகர கழகச் செயலாளர் நாட்டான் மாடு, முல்லைவேந்தன், குமார், மாதேஸ்வரன், சுருளிராஜன், ரவி, நகர இளைஞரணி அமைப்பாளர் சபரிநாதன், நகர மாணவரணி சுமன், ஒன்றிய செயலாளர் காவேரி, ஓட்டுனர் அணி மாது, போக்குவரத்து துறை அலுவலர்கள், நடத்துனர்கள், ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

