தருமபுரி, நவம்பர் 14:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாஜூகாவில் இயங்கி வரும் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான அரவைக்காக பதிவு செய்யப்பட்ட கரும்பை, ஆலை விதிகளை மீறி வெளியில் எடுத்துச் செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய செயல் சட்டவிரோதம் மட்டுமல்லாது, ஆலைக்கும் மாநில அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கும் தொடர்ந்து புகார்கள் கிடைத்து வருகின்றன.
கடுமையான சட்டநடவடிக்கை எச்சரிக்கை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்ததாவது:
-
பதிவு செய்யப்பட்ட கரும்பை வெளிச்சந்தை அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலையில் விற்பனை செய்வது
-
கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் – 1966
-
அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் – 1955 (Sec 7(1)(a)(i))ஆகியவற்றின் கீழ் கடுமையான குற்றமாகும்.
-
-
இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடும்
-
அங்கத்தினர்கள்
-
இடைத்தரகர்கள்
-
வெல்லம் ஆலை உரிமையாளர்கள்மீது உடனடி சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
-
பதிவு செய்யாத கரும்பை எடுத்துச் செல்ல விதிமுறைகள்
ஆலைப் பகுதியை சாராத (பதிவு செய்யாத) கரும்பை எடுத்துச் செல்லும் விவசாயிகள்:
-
உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெற்றிருக்க வேண்டும்.
-
அந்த ஆவணங்கள் இருந்தாலே மட்டுமே வாகனங்களில் கரும்பை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படும்.
ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
© தகடூர்க்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)