தருமபுரி, நவம்பர் 14:
கிருஷ்ணகிரி திட்ட பராமரிப்பு கோட்டம் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பெறும் பல ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மூன்று நாட்கள் குடிநீர் வழங்கல் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
யார் யார் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன?
ஒகேனக்கல் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகள்:
-
பென்னாகரம் ஒன்றியம் – 10 ஊராட்சிகள்
-
காரிமங்கலம் ஒன்றியம் – 26 ஊராட்சிகள்
-
பாலக்கோடு ஒன்றியம் – 32 ஊராட்சிகள்
-
பேரூராட்சிகள் – பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி
இந்த பகுதிகள் அனைத்திற்கும் 18.11.2025, 19.11.2025 மற்றும் 20.11.2025 ஆகிய மூன்று நாட்களில் குடிநீர் வழங்க இயலாது.
ஏன் குடிநீர் தடை?
-
தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகளை 18.11.2025 அன்று மேற்கொள்கிறது.
-
பாலக்கோடு மூங்கில்பட்டியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில்பழுதுபட்ட வால்வுகளை அகற்றி புதிய 600 mm பட்டர்ஃப்ளை வால்வுகளை பொருத்தும் பணி நடைபெறுகிறது.
இந்த பராமரிப்பு மற்றும் மாற்று பணிகளின் காரணமாக ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் மூன்று நாட்கள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவுறுத்தல்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம்:
-
இந்நாட்களில் உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளவும்
-
கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)