தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப (ITI Level–III) தேர்வு எதிர்வரும் 16.11.2025 அன்று நடைபெற உள்ளது. தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் மாலை 2.30 மணி முதல் 5.30 மணி வரை என இரண்டு வேளைகளில் CBT முறையில் நடைபெறும். பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் பொறியியல் கல்லூரி தேர்வு மையங்களில் மொத்தம் 250 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் தகவலின்படி:
-
தேர்வு மையங்களில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
-
பேருந்துகள் நின்று செல்லும் வகையில் சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
-
தேர்வர்கள் தாமதத்தை தவிர்க்க குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகள் – கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியவை
-
அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மையத்திற்கேயே அனுமதி வழங்கப்படும்.
-
தாமதமாக வரும் தேர்வர்கள் எந்த சூழலிலும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
-
தேர்வு மையத்திற்குள்
-
மொபைல் போன்
-
புளுடூத் சாதனங்கள்
-
ஸ்மார்ட் வாட்ச்
-
பிற மின்னணு உபகரணங்கள்எதுவும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
-
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் "தேர்வர்கள் அனுமதி சீட்டு, அடையாள ஆவணம் ஆகியவற்றுடன் நேரத்திற்கு முன் மையத்திற்குச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

.jpg)