தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கிய திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் 2024–2025 ஆண்டிற்கான 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்படுகின்றன.
தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தலா ரூ.1,00,000/- உதவித்தொகை வழங்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவங்களை
- தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்,
- ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தில்
- வேலை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விண்ணப்பப் படிவங்கள் இணையத்திலும் கிடைக்கின்றன:
➡ tn.gov.in
அல்லது
விண்ணப்பத் தகவல்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)