Type Here to Get Search Results !

தருமபுரியில் அடுக்குமாடி குடியிருப்புகள் – வீடு பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தருமபுரி, நவம்பர் 13:

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNHB) மூலம் தருமபுரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வீடு பெற விரும்பும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. தெரிவித்தார்.

மாவட்டத்திலுள்ள திட்டப்பகுதிகள்:


வீடுகள் வழங்கப்பட உள்ள பகுதிகள்:
  • பென்னாகரம் பேரூராட்சி – பொடூர் திட்டப்பகுதி

  • பொமல்லாபுரம் பேரூராட்சி அருகில் – கொண்டஹரஹள்ளி திட்டப்பகுதி

  • அரூர் அருகில் – நம்பிப்பட்டி & பிச்சாங்கொட்டாய் திட்டப்பகுதிகள்

  • காரிமங்கலம் அருகில் – முக்குளம் திட்டப்பகுதி

  • நல்லம்பள்ளி வட்டம் – அதியமான் கோட்டை திட்டப்பகுதி

மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் சொந்த வீட்டில்லாத குடும்பங்கள் வீடு பெற விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்

  • குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) நகல்

  • வாக்காளர் அடையாள அட்டை நகல்

  • வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்

  • குடும்பத்தாரின் புகைப்படம்


தகுதி நிபந்தனைகள்

  • ஆண்டு வருமானம் ₹3 இலட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

  • வீடு பெறும் முன் அரசு நிர்ணயித்த பயனாளி பங்கை முன்பணம் செலுத்த வேண்டும்.

  • “எனக்கு சொந்த வீடும் நிலமும் இல்லை; அரசு வழங்கும் வீடுகளை விற்கவோ/குத்தகைக்கு விடவோ மாட்டேன்” என்ற உறுதிமொழி சமர்ப்பிக்க வேண்டும்.


📅 05.12.2025 அன்று முன் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட திட்டப்பகுதி அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். மாவட்டத்திலுள்ள வீடில்லாத குடும்பங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies