தருமபுரி – நவம்பர் 21
தருமபுரி மாவட்ட வளமையம் ஊராட்சிகள் திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவன மையத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் “ஊட்டமிகு சிறுதானிய உணவுத் திருவிழா” இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சிறுதானிய விழிப்புணர்வு – அரசு திட்டங்கள்
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
-
அரசு உத்தரவின்படி (G.O.(MS) No.157 – 4.5.2025) சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
-
சிறுதானிய உணவுப் பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுகள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்படுகிறது.
-
நாகரீக வளர்ச்சி மற்றும் உடனடி சமையல் உணவுகளின் காரணமாக சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்ட சூழலில், இதன் நன்மைகளை மக்களுக்கு மீண்டும் எடுத்துரைப்பதே இந்த திருவிழாவின் நோக்கம்.
தருமபுரியில் சிறுதானிய சாகுபடி
-
தருமபுரி மாவட்டத்தில் 1,41,460 ஏக்கரில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகிறது.
-
சிறுதானிய உற்பத்தி திறனை உயர்த்த வீரிய இரகங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
-
FNS-NC திட்டம் மூலம்:
-
4085 ஹெக்டேரில் செயல்விளக்கங்கள்,
-
132.3534 மெ.டன் சிறுதானிய விதைகள் (50% மானியம்),
-
14 மெ.டன் விதை உற்பத்தி மானியம்,
-
1325 ஹெக்டேர் நுண்ணூட்டங்கள்,
-
1655 ஹெக்டேர் உயிர் உரங்கள்,
-
825 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை,
-
அறுவடைக்கு பின் தானியங்களை பாதுகாக்க 4 தார்பாலின்கள் வழங்கப்பட்டுள்ளது.
-
சிறுதானியங்களின் நன்மைகள்
-
நீண்ட நேரம் பசி எண் இல்லாமல் இருக்க உதவும் நார்ச்சத்து மிகுந்தது
-
நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு சிறந்தது
-
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
-
புரதம், இரும்பு, கால்சியம், மக்னீசியம் நிறைந்தது
-
Gluten-free – பசையம் இல்லாத உணவு விரும்புவோருக்கு ஏற்றது
-
தோசை, இட்லி, புட்டு, நூடுல்ஸ் போன்ற பல உணவுகளாக மாற்றி உட்கொள்ளலாம்
சிறுதானியங்களின் மருத்துவ குணங்கள்
-
சோளம் – இதய நோய், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு தடுப்பு
-
கேழ்வரகு – இரத்தச் சர்க்கரை கட்டுப்பாடு, எலும்பு வலிமை
-
கம்பு – இரத்த அபிவிருத்தி, அதிக புரதம்
-
வரகு – நரம்பு மண்டலம் சீராக்கம், பருமன் கட்டுப்பாடு
-
சாமை – செரிமானம், மலச்சிக்கல் தடுப்பு, எலும்பு வலிமை
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், நகர மன்ற தலைவர் மா. லட்சுமி நாட்டான் மாது, வேளாண்மை இணை இயக்குநர் ர. ரத்தினம், விற்பனை & வணிகம் இணை இயக்குநர் மு. இளங்கோவன், வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் வெண்ணிலா, உதவி இயக்குநர்கள், அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டவர்கள்

.jpg)