பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி திருமதி கங்கா அவர்கள் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி அவர்கள் கூட்டத்தின் நோக்கம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கிய பொறுப்புகள் குறித்து விளக்கமளித்தார்.
அவர் தனது உரையில்,
“8 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கான ஆதார் புதுப்பித்தலுக்கான சேவை கட்டணம் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டு வரும் ‘திறன் திட்டம்’ மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை எளிமையாக கற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளன,”எனத் தெரிவித்தார்.
மேலும், இல்லம் தேடிக் கல்வி திட்டம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மன்ற நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுற்றுப்புற சுத்தம், டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் குறித்தும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் வளர்மதி அவர்கள் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் ஆசிரியர்கள் பழனிச்செல்வி, கல்பனா, கலைச்செல்வி, ராஜேஸ்வரி, அனுப்பிரியா உள்ளிட்டோர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)