தருமபுரி, நவ. 24:
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் MGS. வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட துணை அமைப்பாளர்கள் கே.ஆர்.சி. செல்வராஜ், பெ. ராஜகோபால், N.S. கலைச்செல்வன், R.P. முத்தமிழன், G. அசோக்குமார், தீ. கோடீஸ்வரன், தங்கச்செழியன் ஆகியோர் முன்னிலையில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், திமுக இளைஞர் அணி செயலாளர் #DyCMUdhay உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் நவம்பர் 27 அன்று ஏழை, எழிய மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு கூட்டத்தைக் சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)