தருமபுரி, நவ. 09 -
இந்நிலையில், தருமபுரி செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி – மைதிலி தம்பதியினரின் எட்டு வயது மகள் பிரணித்தா அவர்கள், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தனது தலைமுடியை தானமாக வழங்கி, சிறு வயதிலேயே பெரும் மனிதநேயத்தின் எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார். பிரணித்தா தற்போது அமலா நர்சரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நிகழ்வில், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம், தன்னார்வலர்கள் கணேஷ், குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டு பிரணித்தாவை பாராட்டினர்.
அமைப்பின் தலைவர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் கூறுகையில்,
“ஒரு குழந்தையின் புன்னகை ஆயிரம் உயிர்களுக்கு நம்பிக்கை. சிறுமி பிரணித்தா செய்த இந்த கூந்தல் தானம், மனிதநேயத்தின் உண்மையான சின்னம். சமூகத்தில் இதுபோன்ற நல்ல செயல்கள் பெருகட்டும்,” என்று தெரிவித்தார்.
தருமபுரி முழுவதும் “மை தருமபுரி” அமைப்பு தட்டணுக்குத் தானம், இரத்த தானம், கூந்தல் தானம் உள்ளிட்ட பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)