Type Here to Get Search Results !

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கூந்தல் தானம் செய்த தருமபுரி குடும்பத் தலைவி கோகிலா.


தருமபுரி, நவ. 08 -

மனிதநேயம் உயிர்ப்பிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் “மை தருமபுரி” அமைப்பின் சார்பில், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புற்றுநோய் சிகிச்சையின் போது முடி உதிர்வு அதிகமாகும் என்பதால், குழந்தைகள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்பப்படுகின்றனர். இதனை உணர்ந்த “மை தருமபுரி” அமைப்பினர், சமூகத்தில் கூந்தல் தானம் குறித்த விழிப்புணர்வை பரப்பி வருகிறார்கள்.


அதன் ஒரு பகுதியாக, தருமபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவி கோகிலா ஸ்ரீதர் அவர்கள், புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தனது கூந்தலை தானமாக வழங்கி, மனிதநேயம் மிக்க முன்மாதிரியாக திகழ்ந்தார். அவரது தன்னலமற்ற செயலை பாராட்டி, “மை தருமபுரி” அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


நிகழ்வில் அமைப்பின் நிறுவனர் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். “ஒரு கூந்தல் தானம் – ஒரு குழந்தையின் நம்பிக்கை!” என்ற வாசகத்துடன் நடைபெற்ற இந்தச் செயல், தருமபுரி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies