தருமபுரி – நவம்பர் 24
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகளை முன்னிட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினர்.
96% படிவங்கள் வழங்கப்பட்டன – 50% மீளப்பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது – ஆட்சியர் தகவல்
கூட்டத்தில் பேசுகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. ரெ. சதீஸ் அவர்கள் தெரிவித்ததாவது:
-
தருமபுரி மாவட்டத்தில் 96% வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
-
அதில் 50% படிவங்கள் மீண்டும் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
-
கணக்கெடுப்பு படிவத்தை திருப்பிக் கொடுக்கும் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
-
படிவத்தை அளிக்காதவர்களின் பெயர் வரைவு பட்டியலில் இடம்பெறாது என்று எச்சரிக்கப்பட்டது.
ஒரு நாளில் 50 படிவங்கள் வரை அரசியல் கட்சிகள் வழங்கலாம்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், ஒரு நாளுக்கு அதிகபட்சம் 50 படிவங்கள் வரை வாக்காளர்களிடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டது. அத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த பணியில் ஒத்துழைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டார்.
தகுதியானோர் மட்டும் பட்டியலில் சேர வேண்டும் – தகுதி இல்லாதவர்கள் நீக்கப்பட வேண்டும்
தகுதியான அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர வேண்டும் என்பதையும், தகுதி இல்லாதவர்கள் பட்டியலில் இடம் பெறாதவாறு அனைத்து தரப்பிலுமுள்ள அலுவலர்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி காயத்ரி (தருமபுரி), திரு செம்மலை (அரூர்), மகளிர் திட்ட இயக்குநர் அ. லலிதா, உதவி ஆணையர் (கலால்) நர்மதா, நகராட்சி ஆணையர் சேகர், அனைத்து தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)