தருமபுரி, நவம்பர் 04:
பேரணி பெரியார் சிலை அருகில் இருந்து தொடங்கி பிஎஸ்என்எல் அலுவலகம் வரை நடைபெற்றது. அதன் பின் பொதுக்கூட்டம் மாவட்டத் தலைவர் கரூரான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அவை —
-
மத்திய அரசின் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்.
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (NREGA) மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்.
-
இலவச வீட்டு மனை பட்டாவிற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக பட்டா வழங்கப்பட வேண்டும்.
-
ஆந்திரா மாநிலம் போல மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்த வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் வில்சன், மாநில பொருளாளர் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வி, வரவேற்புக் குழு பொருளாளர் மாதேஷ், மற்றும் மாவட்ட, வட்ட, கிளை நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக வட்டத் தலைவர் பழனி நன்றி உரையாற்றினார்.

.jpg)