இக்கூட்டம் அரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரூர் வட்டாட்சியர் மற்றும் அரூர் துணை வட்டாட்சியர் (தேர்தல்) ஆகியோர் கலந்து கொண்டு, SIR வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான செயல்முறை, பெயர் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்த விண்ணப்பங்கள் செய்வது குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பாக மாவட்ட துணை செயலாளர் சி. கிருஷ்ணகுமார், நகர செயலாளர் முல்லைரவி, ஒன்றிய செயலாளர்கள் ஆர். வேடம்மாள் (முன்னாள் எம்.எல்.ஏ), ஈ.டி.டி. செங்கண்ணன், கோ. சந்திரமோகன், வே. சௌந்தரராசு, எம். ரத்தினவேல், எஸ். சந்தோஷ்குமார், நகராட்சி துணைத் தலைவர் சூர்யா தனபால், மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் கு. தமிழழகன், நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் செல்வதயாளன், உதயசூரியன், ராசிதமிழ், பிரியங்கா ஆகியோரும் பங்கேற்றனர்.
அதேபோல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகளும் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்

.jpg)
.jpg)