தருமபுரி – நவம்பர் 23
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (IUML-CPI) தருமபுரி மாவட்ட குழுவினர், மாவட்ட வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் பிரதாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முக்கிய கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:
-
காவிரி உபரி நீரேற்ற திட்டத்தின் கீழ் பென்னாகரம், தருமபுரி, நல்லம்பள்ளி பகுதிகளிலுள்ள PWD உள்ளாட்சி ஏரிகளுக்கு நீர் விட உடனடி நடவடிக்கை.
-
தென்பெண்ணை ஆறு ஈச்சம்பள்ளம் அணையில் இருந்து மொரப்பூர், கடத்தூர் வட்டாரங்களில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீரேற்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
-
மொரப்பூர் – தருமபுரி ரயில் பாதை திட்டத்தை வேகப்படுத்தி முடிக்க வேண்டும்.
-
மலைகிராமங்களில் BSNL டவர்கள் தானியங்கி ஜெனரேட்டர் வசதி உடனடியாக செயல்படும் வகையில் அமைக்க வேண்டும்.
-
சித்தேரி, சிட்டிலிங், வத்தல்மலை, எரிமலை, பிக்கிலி, ஏரியூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 5G வசதி ஏற்படுத்துதல்.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், சீமை கருவேலத்தை அகற்றும் பணிகளைச் சேர்த்து, கிராம தொழிலாளர்களுக்கு வேலை வழங்க ஒன்றிய அரசு விதிகளில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும்.
-
தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பத்திரப் பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பி, கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)