ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவை:
-
அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
-
பணி ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு ₹10 லட்சம் மற்றும் உதவியாளர்களுக்கு ₹5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும்.
-
ஓய்வுக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் ரூ.9,000 (அகவிலையுடன்) வழங்கப்பட வேண்டும்.
-
மே மாத கோடை விடுமுறை ஒரு மாத காலமாக வழங்கப்பட வேண்டும்.
-
1993 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
-
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
-
செல்போன் வழங்காத மாவட்டங்களுக்கு 5G மொபைல், 5G சிம் கார்டு மற்றும் வைபை இணைப்பு வழங்கி FRS முறையை எளிமைப்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கவிதா, மாவட்ட பொருளாளர் தெய்வானை, பொறுப்பாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டம் முழுவதிலுமிருந்து 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

.jpg)