Type Here to Get Search Results !

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


பாலக்கோடு, நவம்பர் 5:

கோவை மாணவி மீது நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, பாலக்கோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா தலைமையில் நடைபெற்றது.

கோவையில் நேற்று இரவு விமான நிலைய பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி வீசி தப்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட மாணவி இன்று அதிகாலை கோவை போலீசாரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி தருமபுரி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் பூங்கொடி, மாவட்ட துணைத் தலைவி லட்சுமி, மாவட்ட பொருளாளர் முருகம்மாள் உள்ளிட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், “பெண்களின் பாதுகாப்பு அரசின் முக்கியப் பொறுப்பு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies