தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடசமுத்திரம் கிராமம் ஆசாரி தெருவில் உள்ள தெரு மின்விளக்கு கடந்த ஒரு மாதமாக செயலிழந்த நிலையில், மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலமுறை ஊராட்சி செயலரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். குறிப்பாக மழைக்காலம் என்பதால் சாலைகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் சேர்ந்து பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
தெருவிளக்கு எரியாததால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வாகனங்கள் செல்லவும், மக்கள் நடந்து செல்லவும் மிகுந்த சிரமம் நிலவுகிறது. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அடிக்கடி வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலரும் மாவட்ட நிர்வாகமும் இதன் மீது உடனடி கவனம் செலுத்தி, பழுதான தெரு மின்விளக்கை சீரமைத்து ஒளியூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

.jpg)