பாலக்கோடு, அக். 26 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அரிமா சங்கம், கே.ஜி.எம். மருத்துவமனை, ஸ்ரீ ராம் சில்க்ஸ், மற்றும் தருமபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.
பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் கண்புரை மற்றும் கண் நோயால் பாதிக்கப்பட்ட 96 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு இலவசமாக கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் அரிமா சங்க நிர்வாகிகள் பத்ரிநாராயணன், நாகராஜ், செந்தில், குமார் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த முகாம் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு பார்வை பராமரிப்பு மற்றும் கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

.jpg)